ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.   படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை…

Read More

“சினிமாவில் புதிய சுழல்: மோனிஷா சென் தனது அடியெடுத்து வைக்கும் தருணம்”

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை பொழுதுபோக்கு துறையில் அதிகம் வெளிப்படுகிறது. பிராந்திய மற்றும் மொழித் தடைகள் போன்றவற்றைக் கடந்து திறமை மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது. பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவரது சினிமா வருகைக்கு பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.   நடிகையாக அறிமுகமாவது பற்றி மோனிஷா சென் பகிர்ந்திருப்பதாவது, “இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிரபாஸ், என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளை என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப்…

Read More