தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன்…

Read More

“சீதா பயணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அனைவரும் கொண்டாடி மகிழும், தீபாவளி நன்நாளில், மேலும் இனிமை சேர்க்கும் விதமாக, குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. மகிழ்ச்சியான ஒரு இனிய பயணத்தை உறுதி செய்கிறது, இந்த போஸ்டர். பிரபல நட்சத்திர நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் “சீதா பயணம்” திரைப்படம், இதயம் நெகிழும் தருணங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை ஒன்றாக இணைத்து, ஒரு அருமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. முன்னணி பிரபலங்களான சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது, கதைக்கு கூடுதல் ஈர்ப்பைக் கொண்டு வந்துள்ளது.…

Read More

முன்னாள் ராணுவ வீரர் எம்.ஏ.பாலா இயக்கும் படத்தில் டாக்டராக நடிக்கும் யாஷிகா ஆனந்த்

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார். எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார்.…

Read More

‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்துறை நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து இந்த டாக்குமெண்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக இது ப்ரீமியராகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத நடிகை நயன்தாராவின் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும். மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களை இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம். இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை…

Read More

ஆரஞ்ச்வுட் வழங்கும் ’ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024’!

சென்னை, இந்தியா – அக்டோபர் 2024 – ஃபேஷன், கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்ற முன்னணி பத்திரிக்கையான ப்ரோவோக் லைஃப்ஸ்டைல், நவம்பர் 2 மற்றும் 3, 2024 ஆகிய தேதிகளில் ஆரஞ்சுவுட் வழங்கும் ’ப்ரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024’ ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இரண்டாவது வருடமாக நடக்கும் இந்த விழாவின் வசீகரிக்கும் தீம், ’Where Elegance Meets Art’ என்பதாகும். நிகழ்வு நடக்கும் மாலை வேளை, பங்கேற்கும் அனைவருக்கும் மறக்க முடியாததாக அமைய மகிழ்ச்சியான கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும் வழங்கப்படுகிறது. நவம்பர் 2, 2024: புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபனா சந்திரகுமார், கர்நாடக இசைக்கலைஞர் ஸ்ரீ அபிஷேக் ரகுராமுடன் இணைந்து நடத்தும் கலைநிகழ்ச்சி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும். கலைத் துறையில் சிறந்த…

Read More

அமரன் – திரை விமர்சனம்

2014 இல் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை. அதை சினிமாவுக்கான சமரசம் இன்றி அதேநேரம் இதயம் நெகிழும் விதத்தில் தந்ததற்காக படக்குழுவுக்கு முதலில் ஒரு ஹாட்ஸ் ஆப். பள்ளியில் படிக்கிற காலம் தொட்டு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவன் முகுந்த்தின் கனவு. கல்லூரி காலத்தில் அதை செயல்படுத்த முனையும் போது தான் ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்ப்பு. இன்னொரு பக்கம் முகுந்த் காதலிக்கும் மலையாள பெண்ணின் குடும்பம் இதற்காகவே பெண் தர மறுக்கிறது. எதிர்ப்பை சரி செய்து காதலியை ஒருவழியாக கரம் பிடிக்கும் முகுந்த், அடுத்தடுத்த பதிவு உயர்வுகளில் மேஜர் ஆகிறார். அன்பு மனைவி அழகு குழந்தை என மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் காஷ்மீர் தீவிரவாதிகளை களை எடுக்க…

Read More

பிரதர் – திரை விமர்சனம்

எளிதான தலைப்பில் வந்திருக்கும் அக்கா தம்பி பாசக் கதை. எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி. அவரது பாசமிகு அக்கா பூமிகா. அக்கா திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் என்று செட்டிலாகி விட… தம்பி ஜெயம் ரவியோ அனுதினமும் தனது லா பாயிண்ட்டில் பெற்றோருக்கு தலைவலி தர, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அதுவே நெஞ்சு வலியில் முடிய, பதறிப் போய் ஊட்டியில் இருந்து ஓடிவரும் அக்கா, தம்பியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். அங்கே ஒரு ஆறு மாத காலம் தங்க வைத்து தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாக அப்பாவுக்கு வாக்கு கொடுக்கிறார். ஆனால் போன இடத்தில் ஜெயம் ரவியின் லா பாயிண்ட் இன்னும் பிரச்சனையாகிறது. எதற்கும் எல்லாவற்றுக்கும் டைம் டேபிள் போட்டு வாழும் அந்த குடும்பத்தில் இருந்து அக்கா குடும்பம் பிரிய தம்பியே…

Read More