Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது. கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.
Read MoreDay: December 16, 2024
நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது.
D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், நடிகர் கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு (15.12.2024) பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது. நடிகர்கள் : வெற்றி, ராதிகா ப்ரீத்தி, பேரரசு, பழக்கருப்பையா, சரண்ராஜ், வினோத் சாகர், சுப்ரமணியம் சிவா, அபினயா தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு நிருவனம் : D.R பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : சத்யவதி அன்பலகன், தனுஷ் ராஜ்குமார் இயக்கம் : தனுஷ் ராஜ்குமார் இசை : ஜுபின் ஒளிப்பதிவாளர் : இளையராஜா …
Read More