“கிராவனின் பயணத்தின் கதையை நேர்மையாகச் சொல்ல இதுவே ஒரே வழி.” – ‘கிராவன் தி ஹண்டர்’ ஏன் ‘ஆர்’ என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர்! மிகவும் எதிர்பார்க்கப்படும் ’கிராவன் தி ஹண்டர்’ இன்னும் 2 வாரங்களுக்குள் அதாவது 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சோனியின் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான ஸ்பைடர் மேனின் மிகவும் அச்சுறுத்தும் எதிரிகளில் ஒருவரான கிராவனுடன், ’ஆர்’ ரேட்டட் ஆக்ஷன்-பேக் என்டர்டெய்னர் படமாக வெளியாகிறது. படத்திற்கு ‘ஆர்’ ரேட்டட் சரியானது என்றும் இதன் மூலம் கிராவனைப் பற்றி இன்னும் சரியான வழியில் கதை சொல்ல முடிந்தது என்றும் இயக்குநர் ஜே.சி. சன்டோர் தெரிவித்துள்ளார். கிராவனின் கதையை அழுத்தமான, நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக சன்டோர் எந்த சமரசமும் இல்லாமல் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பது,…
Read MoreDay: December 18, 2024
— Ui’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் உபேந்திரா பெருமிதம்
‘ லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி செய்தி யாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இணைத் தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், “இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்” என்றார். தயாரிப்பாளர் சமீர்: “ஒரு சிலருக்கு மட்டும் தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”. பாடலாசிரியர் மதன் கார்க்கி: தனித்துவமான கதைகள்…
Read More