முதல் பாகத்தின் இறுதியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மலை கிராமத்தில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் வாத்தியார் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து அவரை துணிச்சலாக கைது செய்கிறார் குமரேசன். சித்திரவதை சகிதம் போலீசார் பெருமாள் வாத்தியாரைவிசாரிப்பது போல முதல் பாகம் நிறைவடைகிறது. இரண்டாம் பாகத்திலோ பெருமாள் வாத்தியாரின் முன் கதை சொல்லப்படுகிறது. போலீஸ் காவலில் இருக்கும் அவரது வாக்குமூலமும் அதைத் தொடர்ந்து காவல்துறையின் ரியாக்சனும் தான் இந்த இரண்டாம் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் பண்ணை அடிமை முறை, fஉழைக்கும் வர்க்க மக்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்ரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட கட்டாய மரணங்கள்என அங்குள்ள மக்களின் வலி வேதனைகளை…
Read More