‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘செவப்பி”

நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார். 1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள்…

Read More

மற்றுமொரு எளிமையான யதார்த்த கதையில் நாயகனாக “மணிகண்டன்”

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் ! சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S. வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம், குட் நைட் ), சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இயக்குனர் சுந்தர்ராஜன், தனம் (சிவப்பு மஞ்சள் பச்சை ) பிரசன்னா பாலச்சந்திரன் (மண்டேலா, சேத்துமான்) ஜென்சன் (அயலி ) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில்…

Read More