மிக்ஜம் புயலால் பாதித்த தங்கள் குடியிருப்புவாசிகளுக்கு நிவாரண உதவி அளித்த சின்னத்திரை நடிகர் பாலா

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.…

Read More