மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது! நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரி, பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்…

Read More

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது.   மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் கலந்துகொண்ட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல்…

Read More

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும்…

Read More

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பதைத் தாண்டி, தனது பணியை மக்கள் கவனித்துப் பாராட்டுவதுடன் கொண்டாடவும் செய்கிறார்கள் என்ற உணர்வையும் நீண்ட காலம் அவர் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இந்தப் படம் அவருக்கு கொடுத்துள்ளது. இதுபற்றி ஜீவா சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு…

Read More

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் முத்துக்குமார் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தனக்குக் கிடைத்து வரும் அன்பு குறித்து முத்துக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும், அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த…

Read More

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு – ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித்…

Read More

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், ஹெட்போன், ஓவியப் பொருட்கள், காகித விமானம் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில்…

Read More

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர். ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன…

Read More

Premiering 23rd October 2026, during Dussehra week, the biggest chapter of the beloved franchise takes Hanuman on a journey across time to unlock the true extent of his divinity

  The legend is back, and this time, the stakes are higher than ever. JioHotstar has unveiled the trailer of The Legends of Hanuman Season 7, marking the return of one of its most loved franchises with its biggest chapter yet. Produced by Graphic India and co-created by Sharad Devarajan, Season 7 premieres on 23rd October, during Dussehra week. The new season takes the war in Lanka to its darkest hour, with Ravan rising in his most formidable form yet. As despair grips the vanara camp, Hanuman embarks on a…

Read More

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ (Stone Bench Studio ) –மிஸ்ரிலால் பிக்சர்ஸ் (Misrilall Pictures) நிறுவனங்கள் இணைந்து புதிய திரைப்படத்தைத் தயாரிக்கின்றன!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் புரோமோ ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப்…

Read More