ஒளிப்பதிவு மசோதாவை கண்டிக்கும் கலைஞர்களுக்கு எதிராக பாஜக கலைஞர்கள்

2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்தமசோதாஅறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது  இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். இதனையடுத்து ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு கடந்த சூன் 18 அன்று வெளியிட்டு அது சம்பந்தமாக ஜூலை 2 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது வழக்கம்போலவே தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் இதை பற்றிய புரிதல் இல்லாமை, இதனால் நமக்கு என்ன நஷ்டம் என்கிற மனநிலையில் இருந்ததாகவே தெரிகிறது பொதுவாக தமிழ் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இது போன்ற அறிவுசார்ந்த விஷயங்களில் செயல்பட யாராவது ஒருவர் தூண்டும் சக்தியாக இருக்க…

Read More

கலைஞரின் கடின உழைப்பை நினைவுபடுத்தும் மு.க.ஸ்டாலின்

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக திரையுலகினர் பலரும் முதல்வரின் பொது நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், இவரது மகனும், நடிகருமான பிரசாந்த் ஆகிய இருவரும் சென்னையில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு கடுமையாக போராடி வருகிறது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளோம் முதல்வரின் வேகம் சிறப்பாக உள்ளதுடன் செயல்பாடுகள் பெருமைக்குரியதாக, சிறப்பாக இருக்கிறது கலைஞர் அவர்களுடன் படத்தில் பணியாற்றியிருக்கிறேன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகள் கலைஞர் கருணாநிதியை எனக்கு நினைவூட்டுகிறது என்றார்

Read More