சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி சுப்பையா, அதிமுகவுடன் இணைந்தார். இதனால், கட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு 50 அடி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. சிறந்த கூட்டணி அமைத்து போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டுவோம். அமமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் போன்றோர் தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு என்பது எங்களுக்கு ஓர் அனுபவம். ஒரு சிலர்…
Read MoreMonth: March 2020
பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும்!
பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய…
Read More