தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தாலும் , மக்களிடையே நிலவும் அச்சம் , உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பன போன்ற காரணங்களால் தற்போது வரை தியேட்டர்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வர்றதில்லை. இச்சூழலில் தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நடத்தும் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பத்தி கேட்டப்ப்போ திருப்பூரார் சொன்னது இது : மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்க கூடிய 8 ஸ்க்ரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த ப்ரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளனர். 3999 ருபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்…
Read MoreMonth: December 2020
ஸ்டாலினை திடீரென சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி!
வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேர் எதிர் கருத்து பேசிவரும் சி.என்.இராமமூர்த்தி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பாமக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாமக இப்போது ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டசபை தேர்தலில் திமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. இந்த சூழலில் சி.என்.இராமமூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து சி.என்.இராமமூர்த்தியிடம் கேட்டபோது, “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா,…
Read More