பிரைவசி தியேட்டர் கலாச்சாரம் வந்தாச்சுங்கோ!

தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தாலும் , மக்களிடையே நிலவும் அச்சம் , உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பன போன்ற காரணங்களால் தற்போது வரை தியேட்டர்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வர்றதில்லை. இச்சூழலில் தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நடத்தும் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது பத்தி கேட்டப்ப்போ திருப்பூரார் சொன்னது இது :

மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்க கூடிய 8 ஸ்க்ரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த ப்ரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளனர். 3999 ருபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் .

பிறந்தநாள் போன்ற கொண்டாட கூடிய அனைத்துவகைகளுக்கும் ப்ரைவசி தியேட்டர் கொடுக்கப்படும் ,

அப்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்த படத்தை விரும்புகிறார்களோ அந்த படம் திரையிடப்படும்

கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் இருந்து விலகாத இந்த காலகட்டத்தில் , அச்சம் இல்லாமல் தனியாகவோ , குடும்ப உறுப்பினர்களோ மட்டுமே பார்க்க கூடிய இந்த ப்ரைவசி தியேட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுமுன்னு நம்பலாம்

Related posts

Leave a Comment