கிரிக்கெட்வர்ணணையாளர் கரம்பற்றிய கிரிக்கெட் வீரர் பும்ரா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக்கொள்வதாக பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் பிறகு, டி20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவைத் திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 15ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், சஞ்சனா கணேசனை நேற்று (மார்ச் 15) பும்ரா திருமணம்…

Read More

முடிவுக்கு வராத விஜய்65 திரைக்கதை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய் – நெல்சன்  இணையும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தற்போது நெல்சன் திலீப்குமார், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான திரைக்கதை வசன வேலைகள் இன்னும் முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார். நெல்சன் திலீப்குமாரின் டாக்டர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்திய நிகழ்வொன்றில், “நெல்சன் திலீப் குமார் ‘டாக்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஒரே சமயத்தில் செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே நெல்சன், ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட்…

Read More