ஆளுநர் உரை முன்னோட்டம் மட்டுமே – மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை வெறும் ட்ரெயிலர் தான் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஜூன் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அவரது உரையில், விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும், நீட் தேர்வுக்குச் சட்ட முன்வடிவு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பயிர்க் கடன், கல்விக் கடன், நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், 16 ஆவது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 24) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். உரையாற்றியவர்களின் கருத்துகளை அரசுக்கு…

Read More

ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 24) ஆஜரானார்.   2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் வருகிறது. நீரவ் மோடி, லலித் மோடி நரேந்திர மோடி” என்று குறிப்பிட்டுப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது.   இந்நிலையில் மோடி சமூகத்தையே இழிவுபடுத்திப் பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தைச் சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏ.என்.தவே உத்தரவிட்டிருந்தார்.   ஏற்கனவே…

Read More