பாக்ஸ் ஆபிஸில் 250 கோடியை வசூலித்த ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌ இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌ இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான ‘டங்கி’ திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு ‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில்…

Read More

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

  SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். இந்தநிலையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதாநாயகனான ஆதவ் பாலாஜி, மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர். டீசரை ஆர்வமுடன் பார்த்து ரசித்த நடிகர் விஜய்சேதுபதி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்களுக்கு…

Read More

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா

டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர். இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை தமிழின் முன்னணி நடிகரான சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள்…

Read More

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. பாடகி மஹதி பேசியதாவது… பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான…

Read More

வசூலில் சாதித்த ‘சலார் பார்ட் 1 – சீஸ்ஃபயர்”

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 – சீஸ்ஃபயர்- இந்த திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து, புதிய வரலாற்றை எழுதி வருகிறது. ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், வார இறுதியில் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படம், ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி உள்ளது. படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து, இதற்கு முன்னரான பல பெரிய…

Read More

‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘செவப்பி”

நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார். 1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள்…

Read More

தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் ‘பி டி ஜி யுனிவர்சல்’

  உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது BTG யுனிவர்சல் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் தமிழ் திகில் திரைப்படமான ‘டிமான்டி காலனி 2’ உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பாக பாபி பாலச்சந்திரன் பேசுகையில், ”டிமான்டி காலனி 2 இந்த தசாப்தத்தில் மிகவும் விரும்பப்படும் திகில் படமாக இருக்கும்…

Read More

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது ‘புரொடக்ஷன் நம்பர் 2’ ஃபேண்டஸி கதையான ‘சிரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் ‘பதினெட்டாம் படி’ மற்றும் ‘வாலாட்டி’ போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, ‘போர் தோழில்’ புகழ் லிஷா சின்னு, ‘சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இப்படத்தை எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார். மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான…

Read More

கே ஜி எப் பில் கோலாகலமாக துவங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை

  இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 23.12.23 KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக துவங்கியது . வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை கோவை என்று பல ஊர்களில் நடைபெற்று வந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்த வருடம் கே ஜி எப் மற்றும் ஓசூரிலும் , சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக ஓசூரில் துவங்கியது. புத்தர் வாழ்த்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது கே ஜி எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு…

Read More

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’. இந்தத் திரைப்படத்தில் அவருடன் ‘ஜெயிலர்’ ஹர்ஷத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.…

Read More