‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தேங்க்ஸ் மீட்!

  பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது. கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர். சந்தானம் சார் சிறந்த…

Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது.

  இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள். பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசையமைக்க,  ஜெயந்த் சேது மாதவன்…

Read More