உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…
Read MoreDay: June 9, 2024
வெப்பன் விமர்சனம் 3/5..
சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.. Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார். மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.…
Read More