ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்ட தமிழக முதலமைச்சர்!

இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘ஹபீபி ‘ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில் நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா குரலில் யுகபாரதியின் வரிகளில்
சாம் .C.S. இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு.

இப்படப் பாடலை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த படத்தை மீரா கதிரவன் இயக்கி உள்ளார்.

 

Related posts

Leave a Comment