சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’..
Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார்.
அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர்.
அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார்.
மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.
சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை மற்றும் பலர்.
சூப்பர் ஹியூமன் என்ற கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் சத்யராஜ். சூப்பர் ஹுயூமன் கேரக்டர் சமூகத்திற்கு ஒத்து வராது அவர்களுக்கு தன்னால் இடைஞ்சல் வரும் என்ற நோக்கத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு காட்டில் வசிக்கும் சத்யராஜின் எண்ணம் வித்தியாசமானது.. இவரது அறிமுக கட்சியும் கிளைமாக்ஸ் கட்சியும் ரசிகர்களிடையே வரவேற்பு பெறும்.
இரண்டு மாறுபட்ட கேரக்டர்களை தேர்ந்தெடுத்து வெறித்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார் நாயகன் வசந்த ரவி.. இவரது இரண்டாவது கேரக்டர் திருப்புமுனை படத்திற்கு பிளஸ்.. கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அதிர வைக்கிறது. அதற்கு கலை இயக்குனரும் VFX கலைஞர்களும் முழு உழைப்பை கொடுத்திருக்கின்றனர்.
வழக்கமாக வந்து செல்லும் நாயகி வேடத்தில் தான்யா ஹோப் நடித்திருக்கிறார்..
மாஸ்க் போட்டு பேசும் விசாரணை அதிகாரி கொஞ்சமாவது வாயை திறந்து பேசி இருக்கலாம்.. டப்பிங் பிரச்சினை வரும் என்று நினைத்து விட்டார் என்னவோ அவர் பேசும் அந்த கரகர ஜெனரேட்டர் குரல் சுத்தமாக புரியவில்லை..
யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,
வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் இப்படியாக பல நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் இவர்கள் ஓரிரு காட்சிகள் வந்து திரைக்கதைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர்..
ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய கலை சுபேந்தர்.. ஆக்ஷன் – சுதீஷ்.
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்..
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும் இசையும் தான்.. பின்னணி இசையில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என சவால் விட்டிருக்கிறார் ஜிப்ரான்.. ஒளிப்பாதிவாளரும் கலை இயக்குனர் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.. முக்கியமாக பாதி படத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் படமாக்கி விருந்து படைத்திருக்கின்றனர்.
வித்தியாசமான இந்த சயின்ஸ் பிக்சன் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை விசாரணை என்ற பெயரில் பல காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்குப் பிறகு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார். டெக்னிக்கிலாக படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். ஆனால் திரைக்கதையில் இன்னும் சில மெனக்கடலில் இருந்தால் அனைத்து தரப்பு மக்களையும் இந்த வெப்பன் கவர்ந்திருக்கும் எனலாம்.