தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி. இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞனாகவும் வாழ்த்தி, வணங்கி, மகிழ்கிறேன். நன்றி, அன்புடன் நடிகர் உதயா.
Read MoreDay: September 29, 2024
ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!
ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித்…
Read More