சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத,…

Read More

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு…

Read More