“பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் 4 வருடங்களாக முடங்கி கிடக்கிறது” – முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More