முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.…
Read MoreDay: January 25, 2025
தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் ‘மனிதம்’ உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மனிதம்’ திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘மனிதம்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, “உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை ‘மனிதம்’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான் முறையில் திரையில் வெளிப்படுத்தி…
Read More