அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது. தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘ராஜாகிளி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது. மேலும், ‘ஃபயர்’, ‘ஜென்டில்வுமன்’, ‘தினசரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளிட்ட திரைப்படங்களை…
Read MoreDay: March 13, 2025
ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் – மர்மர் இயக்குநர் வேண்டுகோள்
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, “அனைவருக்கும் வணக்கம். எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள்…
Read More