இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள். பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசையமைக்க, ஜெயந்த் சேது மாதவன்…
Read MoreTag: பா.ரஞ்சித்
ப்ளூ ஸ்டார் – விமர்சனம்
ஒரு விளையாட்டுத் தொடர்பான திரைப்படத்தில் என்னெல்லாம் இருக்க வேண்டும். ஒரு தோல்வி, அந்த தோல்வியால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தேடும் தேடல், விளையாட்டிற்குள் அரசியல், பாகுபாடு, வீரர்களுக்குள் முரண்பாடு, சிறிய சறுக்கல், ஒரு பெரிய போட்டி, அந்தப் போட்டியில் வெற்றி, இவைகளுக்கு நடுவே தேவைப்பட்டால் சிற்சில காமெடிகள், காதல் காட்சிகள் இவைகளெல்லாம் இருக்கும் தானே. “வெண்ணிலா கபடிக் குழு” துவங்கி ‘பிகில்’ வரை விளையாட்டு தொடர்பான எல்லாப் படங்களும் இந்த டெம்ப்ளெட்டில் தான் அமைக்கப்படும். அதில் இருந்து சற்றும் சறுக்காமல் அமைக்கப்பட்டு இருக்கிறது “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தின் திரைக்கதை. எக்ஸ்டிரா-வாக வர்க்கம் அரசியலுடன் சற்று சாதிய அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது திரைக்கதை. அரக்கோணத்தில் நடக்கும் கதை. அவ்வூரின் காலனிப் பையன்களுக்கும், ஊர்க்காரப் பையன்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் நெடுநாளைய பகை இருக்கிறது. ஒரு சின்ன சீண்டலில் தங்களுக்குள்…
Read More