சோனியா, ராகுலை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று (ஜூன் 18) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அவரிடம் தமிழ்நாட்டுக்கான 25 கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவை அளித்தார். சுமார் 25நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்புக்குப் பின் தமிழ்நாடு இல்லம் திரும்பினார் ஸ்டாலின். நேற்று இரவு டெல்லியில் தங்கிய ஸ்டாலின் இன்று (ஜூன் 18) காலை ஜன்பத் சாலையில் அமைந்திருக்கும் சோனியாகாந்தியின் இல்லத்துக்குச் சென்றார். ஸ்டாலினோடு அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.   சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் உட்பட எவரையும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவந்த…

Read More

முதல்வரான மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

தமிழ்நாடுமுதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்   பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது 35 முக்கிய வி‌ஷயங்கள் பற்றி பிரதமருடன்  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேச உள்ளார்.…

Read More