தெய்வீகத்துடன் கூடிய ‘காந்தாரா- சாப்டர் 1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக டீசரும் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ‘காந்தாரா ஏ லெஜன்ட்’ எனும் திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘காந்தாரா- சாப்டர் 1’ எனும் படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவரவிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக காணொளி தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தீவிரமிக்க மற்றும் தெய்வீக தன்மையுடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது. நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் அச்சுறுத்தும் வகையிலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தைக் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்… இயக்குநர் தனக்காக உருவாக்கிய தொலைநோக்கு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் எதிரொலித்த பழக்கமான கர்ஜனை மீண்டும் இந்த டீசரில்…
Read More