சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆசை வெட்கம் அறியாது; அதை அடையும் வழியின் ஆபத்தையும்…
Read MoreTag: சத்யா
தூக்குதுரை விமர்சனம்
கற்காலத்தின் காதல் கதையையும், கலியுகத்தில் டேமேஜ் ஆகிக் கிடக்கும் பேய் கதையையும் ஒன்றாக சேர்த்து பேக் செய்து டெலிவரி செய்தால் அதுதான் தூக்குதுரையின் கதை. பணக்கார நாயகி, ஏழை நாயகன் காதல், கெளரவக் கொலை, பேயாக வந்து பழி வாங்குவது. இறுதியில் சுபமான முடிவு. இவ்வளவுதான்… இவ்வளவே தான் இந்த தூக்குதுரை. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், செண்ட்ராயன் , இனியா, மாரிமுத்து, மகேஷ், நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத், தங்கராஜு, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் நடிகர் நடிகைகள் பட்டாளத்தில் காமெடி நடிகர்களே அரை டஜன் கணக்கில் இருந்தாலும், படத்தில் காமெடி கிலோ என்ன விலை என்று நம்மை கேட்கிறார்கள். யோகிபாபு படத்தில் இருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. இனியா அப்படியே. எப்பேர்ப்பட்ட நடிகை. இந்தப்…
Read Moreசீனு ராமசாமி இயக்கத்தில் ”கோழிப்பண்ணை செல்லதுரை”
“ஜோ” படத்தின் வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகி வருகிறது. இது அதிரடி மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய வாழ்வியல் திரைப்படமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி” பாபு படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகனாக ஏகன் அறிமுகமாகிறார். பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச் செந்தூர் ஶ்ரீ…
Read Moreசைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E” அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது
‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘ஸ்பார்க் L.I.F.E’. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘ஹிருதயம்’ மற்றும் ‘குஷி’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது. எதிர்பாராத திருப்பங்களையும் சுவாராசியமான முடிச்சுகளையும் கொண்ட இந்த சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படம்.. நல்ல சக்திக்கும் – தீய…
Read More