‘ஜீவி’ புகழ் ‘வெற்றி- கிஷன் தாஸ்’ நடித்துள்ள படம் ‘ஈரப்பதம் காற்று மழை’!

வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். ‘ஜீவி’ படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’ என்ற புதிய படம் இப்போது தயாராகி உள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது, ”’ஈரப்பதம் காற்று மழை’ திரைப்படம், மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம். வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது. இப்படம், மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் இந்தக் கதை கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு வரும் நிகழ்வுகள் படத்தை…

Read More

கண்ணகி விமர்சனம்

  தன் கணவனால் பல்வேறு அவலங்களுக்கு ஆனாலும் கூட கணவனுக்காக கடைசி வரை நின்றவள் அந்தக் கால கண்ணகி. இந்த காலத்தில் திருமண உறவுக்கு காத்திருக்கும் பெண்ணோ, திருமண பந்தம் சரியில்லாமல் விவாகரத்து கோரும் பெண்ணோ, திருமணமோ காதலோ தனக்கு செட் ஆகாது என்று லிவிங்-கில் வாழும் பெண்ணோ, அல்லது காதலனோடு லிவிங்-கில் இருக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் இன்னும் ஆண்களை நம்பி வாழ வேண்டிய கலியுக கண்ணகியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதே “கண்ணகி” திரைப்படத்தின் கதை. பெண்களுக்கு திருமணமே பாதுகாப்பைத் தரும் என்று சொல்லி  சொல்லி வளர்க்கப்படும் கலை (அம்மு அபிராமி), திருமணம் தனக்கான பாதுகாப்பை தராமல் விவாகரத்து கொடுத்து தன்னை வெளித்தள்ள முயலும் போது செய்வதறியாது திகைக்கும் நேத்ரா (வித்யா பிரதீப்), காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் லிவிங்-கில் இருப்போம் என்று வாழும்  நதி,…

Read More