அமீர்கான் இரண்டாவது முறையாக விவாகரத்து பெற்றார்.

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். லகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கிரண்ராவைக் காதலித்து டிசம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டார். மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர். நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க…

Read More