ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடித்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடி காவியம் இது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் தளர்வுறாப் பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் நேசித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெப்போலியனின் தொலைநோக்கான இராணுவ மற்றும் அரசியல் தந்திரத்தைத் திரைக்கதை எடுத்தியம்ப, இதுவரை வெள்ளித்திரையில் முயற்சி செய்திராத எதார்த்தமான போர்க் காட்சிகளால் சிலிர்ப்பூட்டுகிறது படம்! கதைச்சுருக்கம் – பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில்,…
Read More