கவர்னர் உரை ஏமாற்றமளிக்கிறது – எடப்பாடி கே.பழனிச்சாமி

சட்டசபை  கூட்டத்தில் கவர்னர்  உரைக்குப் பின்  செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து…

Read More