பரதநாட்டியத்திற்கு கமல்ஹாசன் துரோகம் செய்து விட்டார்-ஸ்ரீராம்

இயக்குநர் கே.ஸ்ரீராம்  முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பது பற்றி இயக்குநர் ஸ்ரீராம் கூறியதாவது நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி,  மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன். இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு  விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித்…

Read More