திரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கும் மன்சூர் அலிகான்!

  “எனது திரைத்துறையில் உள்ள பெண்களை யாரேனும் போகிறபோக்கில் கேவலமாகவும், மலிவாகவும் விளம்பரத்திற்காக, சுயலாபத்திற்காக அவமானப்படுத்தும் செயலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். திரைத்துறையில் உள்ள சகோதரிகள் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றதனால் அதில் ஆண்வர்க்கத்திற்கும் சரிசமமாக பங்கு இருக்கிறது. அவர்களை (நடிகைகளை) எந்த குறை சொன்னாலும் அது எங்களையும் சாரும் என்பதை நான் முன்பே பலவேளைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, சக திரைநாயகி திரிஷாவை தவறாக மிகவும் ஈனத்தனமான விமர்சனத்திற்கு உள்ளாக்கிய முன்னாள் அதிமுக நிர்வாகி அரசியலில் இருப்பதற்கே அருகதையற்றவராக நான் கருதுகிறேன். நாங்கள் கருதுகிறோம். இதுபோன்ற இழிசெயலை அதுவும் நம் மாநிலத்திலே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற துறையிலே, அரசியலில் இருந்துதான் திரைக்கு வருகிறார்கள், திரையில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்கிறார்கள் இவ்வாறு பின்னிப்பிணைந்து இருக்கிற ஒரு மண்ணில் இதுபோன்று யாரையும் காயப்படுத்துவதை நான் மிகவும்…

Read More