இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஜித் பாபுஜி தயாரித்திருக்கிறார். பெரும் பாராட்டைப் பெற்ற ‘எண்டே நாராயணனுக்கு’ எனும் குறும் படத்திற்கு பிறகு இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கியிருக்கும் திரைப்படம் இது. மேலும் இந்தப் படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை மதுபாலா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்து மலையாள திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். மதுபாலா உடன் தனித்துவமான நடிப்புத் தருணங்களுக்காக பெயர் பெற்ற நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது. 1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்…
Read Moreரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது. பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர்…
Read Moreஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு
Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும், மரியா இளஞ்செழியன் இயக்கும் “ப்ரொடக்ஷன் நம்பர் 1” படத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக “ஹேப்பி ராஜ்” என அறிவித்துள்ளனர். இயக்குனர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “ஹேப்பி ராஜ்” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது — சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். ஆக்ஷன் நிறைந்த மாஸ் என்டர்டெயினர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுப்பதை நாம் தினந்தோறும் காண்கிறோம். ஆனால்,…
Read More‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!
Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின்…
Read Moreபோராடும் குணம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கி தோல்விகளை களையச் செய்கிறது: கவிஞர் கருணாகரன்
‘வல்லவன்’ திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ மற்றும் ‘கிணறு’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது விஷால் நடிக்கும் ‘மகுடம்’ மற்றும் ‘லைப் டுடே’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதி வருகிறார். தனது பயணத்தை பற்றி பேசிய கவிஞர் கருணாகரன், “எனது கலை உலக பயணம் போராட்டம் நிறைந்தது. மாற்றுத்திறனாளி இவர் என்ன எழுதுவார் என்று பல பேரின் கண்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பிடும். அவர்களின் வார்த்தை மழுப்பலான பதில்களை கொடுக்கும். இவற்றைத் தாண்டி என் மீது…
Read MoreJioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!
JioStar Head Entertainment Business, South Cluster, திரு.கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil திரு. பாலச்சந்திரன் R, Turmeric Media – CEO திரு. R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும்…
Read More‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!
இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள்…
Read Moreஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!
தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது. மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான…
Read Moreதயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தலைமையிலான விஷன் சினிமா ஹவுஸ். முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் விஷன் சினிமா ஹவுஸ் சமீபத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படத்தை அறிவித்தது. இன்று (டிசம்பர் 5, 2025) தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை…
Read More