’விட்ஃபா’ அமைப்பும், அதன் நோக்கமும் திரையுலகத்திற்கு நன்மை செய்யும் – பிரபலங்கள் பாராட்டு

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான…

Read More

நடிகர் பிளாக் பாண்டி தலைமையில் நடைபெற்ற விழா சமூகத்தில் மாற்றம் உருவாக்கும் நிகழ்வாக மாறியது

சென்னை, “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது. இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார். வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்: 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள் 30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு) 20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள் 6 திருநங்கைகளுக்கு ரூ.2000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 3 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.3000 கல்வி உதவித் தொகை 2…

Read More