மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு…
Read MoreMonth: February 2020
சங்கத்தலைவன் பட பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா துளிகள்!
மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதய குமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் களாக சுப்ரமணியம் சிவா,GV பிரகாஷ் , பவான் ஆகியோர் கலந்துகொண்டனர் . விழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியதாவது , “நான் முதல் நன்றி ஜீவிக்கு சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன் . இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது?” அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ரம்யா பேசியதாவது, “சங்கத்தலைவன் எனக்கு முக்கியமான படம். என் ஆக்டிங்கிற்கு நான் பிள்ளயார் சுழி…
Read More