தென் மாவட்ட உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன் ‘சிவப்பு மனிதர்கள்’ தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்கார் கதையின் நாயகன் நாயகியாக நடிக்க மற்றொரு புதுமுக நாயகி சத்யா, அனுகிருஷ்ணா, குட்டிப்புலி, கொம்பன் புகழ் ராஜசிம்மன், வேன்மைக்கேல் டேவிட் (அறிமுகம்), கஞ்சா கருப்பு, பெஞ்சமின், ஆதேஷ் பாலா, பிரேம்சங்கர், வேல்முருகன், சின்ராசு, கருத்தம்மா ராஜஸ்ரீ, சோனா, ரேஷ்மி, லேகா…
Read MoreMonth: January 2021
தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை
தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தை. தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தைவசப்படுத்தும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மூலம் தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தையை அமேசான் பிரைம் வீடியோ பரப்புகிறது* ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாறாவை பிரமோத் பிலிம்ஸ் பேனரில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்க, திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய தமிழ் வெளியீடான மாறா, வெளியான சில மணி நேரங்களிலேயே உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடமிருந்து மிகவும் உற்சாகமூட்டும் விமர்சனங்களைப் பெற்றது. ஓவியங்கள், அழகிய இடங்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் நிறைந்த ஒரு மாயாஜால உலகிற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, எல்லோரும் விரும்பும் நன்னம்பிக்கை மற்றும் நலனைப் பேணும் திரைப்படமாக…
Read Moreஅண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்
அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…
Read Moreநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்…
நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது… சுதந்திரத்துக்குப்பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.. அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்… விவசாயத்தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்……
Read More‘பூமி’ சினிமா விமர்சனம்
‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…
Read Moreஅப்பா, மகள், இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…
அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…. 1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு……
Read Moreமாஸ்டர்’ சினிமா விமர்சனம்
‘மாஸ்டர்’ சினிமா விமர்சனம். வெள்ளித் திரைக்கு வந்துசேர, கடந்த சித்திரையிலிருந்து காத்திருந்த ‘மாஸ்டர்.’ கொரோனா மெர்சலுக்குபின், தளபதி ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் உற்சாகப் ‘பொங்கல்!’ தனது அநியாய அடாவடி கொலைபாதகச் செயல்களுக்கு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கைதியாக இருக்கிற சிறுவர்களை, இளைஞர்களைப் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. அந்த பள்ளிக்கு வாத்தியாராக வருகிற விஜய் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் அந்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டி திருத்தி, விஜய் சேதுபதிக்கு ரிவிட் அடித்து RIPபன் கட்டுகிறார். வழக்கமான ஹீரோயிஸக் கதை லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, விஜய் – விஜய் சேதுபதி என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் அதகள அட்டகாசத்தால் வேகமெடுக்கிறது. தளபதி விஜய் முகத்தில் ஸ்டூடண்டு கலை, பார்ப்பது புரொபசர் வேலை என ‘தெறி’க்க விடுகிறார். அசத்தல் என்ட்ரீ, ஆக்ரோஷ சண்டை என அவர் வருகிற காட்சிகளில் விசிலால் அதிர்கிறது…
Read Moreஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்
ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம். அஜயன் பாலாஇயக்கத்தில தாஜ்நூர் இசையில் கிட்ஸ் Vs கொரோனா : டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர் மாஸ்டர் வில்லன் நடிகர் ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம் பொங்கலுக்கு வருகிறது புதிய கொரொனா எதிர்ப்பு இசை கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர் இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரொனாவால் உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கRelவேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு விளையாட்டு…
Read More” பிசாசு 2 ” படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்
” பிசாசு 2 ” படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம். மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமேரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம். ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது…
Read Moreமன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. *மன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்! இன்று மாலை வெளியீடு!* அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை நக்கலும் நையாண்டியுமாக விமர்சித்து தெறிக்க விடுபவர் மன்சூர் அலிகான். படு துணிச்சலாக அவர் முன் வைக்கும் விமர்சனங்கள் யூ டியூபில் வீடியோவாக வெளிவந்து சமூகவலைதளங்களில் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். அந்த வகையில் மன்சூர் அலிகானின் அடுத்த அதிரடி ‘டிப் டாப் தமிழா’ என்ற பாடல் வீடியோ. ‘ஆன்லைன்லயே கிளாஸ் எடுக்குறாங்க ஆன்லைன்லேயே நாட்டை ஆளுறாங்க ஆன்லைன்லேயே சாப்பாடு ஆர்டர் பண்றாங்க ஆன்லைன்ல ஏர் புடிச்சு மாடுகட்டி விவசாயம் பண்ண முடியாது’ என்று சமூக அவலத்தை போட்டுத் தாக்கும் வரிகளில் அமைந்த அந்த பாடலை…
Read More