வசூலில் 300 கோடியைத் தாண்டி ஏறுமுகத்தில் “டங்கி”

  இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி! 7 நாட்களில் உலகளவில் 300 கோடியைத் தாண்டி சாதனை !! இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது டங்கி. இப்படம் இந்தியாவில் மட்டும் 150 கோடியைத் தாண்டியுள்ளது மேலும் உலக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெறும் 7 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’…

Read More

‘சூர்யாவின் சனிக்கிழமை’ நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம்

நேச்சுரல் ஸ்டார்’ நானி – விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்களை…

Read More