ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்ட தமிழக முதலமைச்சர்!

இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘ஹபீபி ‘ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில் நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா குரலில் யுகபாரதியின் வரிகளில் சாம் .C.S. இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு. இப்படப் பாடலை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த படத்தை மீரா கதிரவன் இயக்கி உள்ளார்.  

Read More

இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.   இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான ‘ஐயையோ’ மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ். பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், “ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி…

Read More