பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது

சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது *மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025* —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக்…

Read More

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’

முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.. விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார். அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும்…

Read More