‘தி ரஜினி இன் மீ’ [The Rajini In Me] நூல் வெளியீட்டு விழா

  அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரணமான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தில் (SANA) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார், அங்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவுவதிலும் அவரது ஆர்வம் இருந்தது. இந்த முயற்சிக்கான அவருடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. அம்பிகை ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் கூட. இருப்பினும், அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக மல்டிபிள் ஸ்களீரோசிஸ்(multiple sclerosis) எனும் நோய் தாக்கி அம்பிகாவை சக்கர நாற்காலியில் அமர வைத்தது. ஆயினும்கூட, துன்பங்களிடம் சரணடைவதற்குப் பதிலாக, அவர் தன் உறுதியைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட சவால்களை மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் மாற்றினார். அவரது…

Read More