”மிஷன் சாப்டர் – 1 எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல்” – எமி ஜாக்சன்

  தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்‌ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார். ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, “இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படத்தின்…

Read More

”எனக்கும் இயலுக்குமான பாசப் பிணைப்பு ரசிகர்களின் உள்ளம் தொடும்” – அருண் விஜய்

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)’ டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில்…

Read More