ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் அர்ஜன் வைலி பாடல் NYC மற்றும் LA இல் விளம்பர பலகைகளை அலங்கரித்துள்ளது ! நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகிய இப்படம், பாக்ஸ் ஆபிஸில் உலகளாவிய வசூல் மூலம் பல சாதனைகளை முறியடித்து வரும் அதே வேளையில், சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடதக்கது. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் அனிமல் படப்பாடலான அர்ஜன் வைலி, விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் ஹோர்டிங்குகளில் இடம்பெற்றுள்ளது. இந்த இடங்களில் இசைக்கப்படும் முதல் இந்தியப் பாடல் இதுவாகும். உலகம் முழுவதும் அர்ஜன் வைலி பாடல், பெரும் கவன ஈர்ப்பை…
Read MoreTag: ரன்பீர் கபூர்
சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது.. இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி…
Read Moreடெல்லி தெருக்களை அதிர விட்ட அனிமல் படக்குழு
ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அனிமல் படக்குழுவினர், டெல்லி தெருக்களில் மக்கள் கூட்டத்தோடு இணைந்து பிரமாண்டமான முறையில் அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழாவினை கொண்டாடினர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் அனிமல் திரைப்படம், ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அனிமல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அனிமல் பட டிரெய்லர் வெளியீட்டு விழா, டெல்லி இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக நடந்தேறியுள்ளது. ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வின் மூலம் டெல்லி தெருக்களை புயலாய் தாக்கி கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது அனிமல் படக்குழு. ரன்பீர் கபூர்,…
Read More