தெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி படம் இயக்க தமிழ் தயாரிப்பாளர் எதிர்ப்பு

பிரபல தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, இயக்குநர் லிங்குசாமி மீது தெலுங்கு திரைப்பட சம்மேளனத்தில் புகார் செய்திருக்கிறார் தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு சிரீஷின் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தின் பூஜை கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னையில் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சிவக்குமார்தான் குத்துவிளக்கேற்றி இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் படம் சம்பந்தமான எந்த வேலைகளும் நடைபெறவில்லை லிங்குசாமி பல்வேறு  பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவித்ததால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஞானவேல்ராஜா. இந்தப் படம் நின்றுபோனதால்  வேறொரு படத்தை…

Read More

இயக்குனர் லிங்குசாமிகனவு நிறைவேறுமா?

ஆனந்தம் படத்தின் மூலம் 2001ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான லிங்குச்சாமிக்கு முதல் படமே 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமாக அமைந்தது மாதவன் நடித்த ரன், அஜீத்குமார் நடித்த ஜீ, விஷால் நடிப்பில் சண்டைக்கோழி,விக்ரம் நடித்த பீமா என தொடர்ச்சியாக தமிழில் வியாபார முக்கியத்துவமுள்ள படங்களை இயக்கினார் அதேவேளை 11 படங்களை சொந்தமாக தயாரிக்கவும் செய்தார் ஆனந்தம் ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி,அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின இதனால் தமிழில் முன்னணி ஹீரோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இவரது இயக்கத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் தயக்கம் காட்டி வந்தனஇந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்றுஉள்ளார் லிங்குசாமி.அடிதடி ஆக்சன் – மசாலாபடமாக…

Read More