லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர் – தமிழ்நாடுகவர்னர் உரையில் அறிவிப்பு

தமிழக ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிர் அளிப்பது பற்றியும், ஊழல் ஒழிப்புத் துறை முடுக்கிவிடப்படுவது பற்றியும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இந்தியாவில் 20 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவியபோதும் கடந்த அதிமுக ஆட்சியில் அது தாமதப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கும் தொடுக்கப்பட்டு நீதிமன்றமும் இது தொடர்பாக அப்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயக்தா அமைப்பு நிறுவப்பட்டது. இதில் லோக் ஆயக்தா தலைவர் மற்றும்…

Read More

அப்பா, மகள், இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…

அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா….   1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு……

Read More