முதல் அமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனை குழு

தமிழக சட்டசபையின்  16 வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர்  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த கவர்னரை  சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார். பின்னர் கவர்னர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அமசங்கள் இருந்தன. அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோசனை  வழங்க  முதல்-அமைச்சருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது:- வரும் சில…

Read More

தமிழ்நாடு அரசின் ஏழு இலக்குகள்

தமிழக அரசின் 7 இலக்குகளை எட்ட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனா பரவல் தமிழகத்தில் 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர். அப்போது , கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், கல்வியில் – வேலைவாய்ப்பில் – சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம்,…

Read More