மாயன் படத்தில்கதையின் நாயகனாக சிவபெருமான்

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார். முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள். பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ்…

Read More

சொடக்கு மேல சொடக்கு 100 மில்லியனை கடந்தது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. அப்படத்தில் மணியமுதவன், விக்னேஷ் சிவன் எழுதி, அந்தோணி தாசன் எழுதிய ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் அப்போதே சூப்பர் ஹிட்டானது. யு டியூபில் அந்த வீடியோ பாடல் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்பாடல் தற்போது 100 மில்லியனைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், யு டியூப் தளத்தில் இன்னும் சில ஆயிரங்கள் பார்வை அதற்குக் குறைவாக உள்ளது. இப்பாடல் 100 மில்லியனைக் கடந்த 26வது தமிழ் சினிமா பாடல். நேற்றுதான் ‘விஸ்வாசம்’ படத்தின் அடிச்சி தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 25வது பாடலாக பட்டியலில் இடம் பிடித்தது. சூர்யாவின் இரண்டாவது 100 மில்லியன் பாடல்…

Read More