சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ” EMI ” மாதத் தவணை ” படம். பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர்-நடிகர் ரங்கராஜ் எனது நண்பர். சினிமா மீது அளவு கடந்த ஆசை கொண்டிருப்பவர். சினிமாவிற்காக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சினிமாவில் வெற்றி என்ற ஒன்று…
Read More