கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின. தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் ஐந்து பேர் நூல் குறித்து…
Read MoreCategory: உலக செய்திகள்
கடைசி நாளில் நிகழ்ந்த அதிசயம் நியூசிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் விராட் கோலி (8 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர். மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6 ஆவது நாளுக்குப்…
Read More